jump to navigation

எது கிண்டல், எது ஆதங்கம் Wednesday January 21, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

இது இல்லன்னா கண்டிப்பா அது தான். நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி, ரயில் தண்டவாளம் மாதிரி, ரெண்டு பக்கம் மட்டுமே உண்டு. புஷ் சொல்ற மாதிரி “you are either with us or against us” நடுவுல எதுவுமே கெடையாது. கம்ப்யூட்டர் மொழியில சொல்லணும்னா 1 அல்லது 0.

இது செஞ்சா அது செய்யக் கூடாது. அட போங்கப்பா.

“உத்தேசித்த சார்ஸ் நோயாளி” -ன்னா என்னன்னு தெரியுமா?

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, செய்திய தொடர்ந்து படிச்சா ஒரு புரிஞ்சிக்கலாம். அகராதியத்தான் பொரட்டணும்னு அவசியமில்ல.

“Suspected SARS patient” – இப்போ வெளங்குதா? ‘சந்தேகித்த’-ன்னு சொல்லலாம். நோயாளி சந்தேகப்பட்டாரா? ஒத்து வராத மாதிரி இருக்கே.

இந்த வார்த்தைய மொதல்ல கேட்டப்போ ( நன்றி: ஒலி ) ஒண்ணும் புரியல. ரெண்டு நிமிஷம் யோசிச்சதும் வெளங்கிடிச்சு.

எங்கிட்ட அகராதி இல்லப்பா (ரெண்டும் தான்).

ஆதங்கம் மட்டுமே இருக்கு. தமிழ்நாட்டுல ஒக்காந்துகிட்டு தமிழ் புரியலன்னு சொன்னா ஆதங்கம் தான் வரும். வார்த்தை வழக்குல இல்லையாம். இதோ இப்படி காதுல தேனா வந்து பாய்ஞ்சா வழக்குக்கு வந்துடும்.

ஆமா ஆதங்கப்பட இவரு பெரிய பொடலங்கா. தூக்கிக் குப்பைல போட்டுட்டு, உருப்படியா வேற வேலை இருந்தா பாருன்னு உள்ளேர்ந்து ஒரு கொரல். தோ, கெளம்பிட்டேன். எனக்கென்ன போச்சு.

Advertisements
%d bloggers like this: