jump to navigation

செய்திகளில் மரியாதை விளிப்புகள Tuesday January 20, 2004

Posted by Pari(பரி) in பொது.
trackback

BBC Report

AP Report

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்கவும்.

படித்துவிட்டீர்களா?

எதாவது வித்தியாசம் தெரிந்ததா? தெரியவில்லையா? தலைப்போடு முடிச்சுப் போட்டுப் பாருங்கள். விளங்கியதா? இல்லையா? ஹும்….நானே சொல்றேன்.

பிபிசி செய்திகளில் பெயர் வரும் எல்லா இடங்களிலும் முன்னால் Mr உட்கார்ந்திருக்கிறது. மரியாதை நிமித்தம் தான். படிக்கும் போது எரிச்சலாக இல்லை?

வெறும் பெயரை மட்டும் எழுதினால் மரியாதையில்லாமல் எழுதுவதாக அர்த்தமா என்ன?

இவர்கள் பரவாயில்லை, தமிழில் “திரு.” மரியாதைக்குரிய “அவர்கள்” -முன்னாடியும் மரியாதை பின்னாடியும் மரியாதை கொடுத்து- எழுதுகிறோம்.

அட போங்கப்பா, ஐயா (‘அய்யா’-ன்னா அடிய போடுவேன் ஜாக்கிரதை), ஆட்டுக்குட்டி சார், மோர் எல்லாம் போரடிச்சுப் போச்சு.

பேரச்சொல்லிக் கூப்பிடலன்னா அப்புறம் எதுக்கு பேர் வைக்கணும்? மரியாதை மனசுல இருக்கு, எழுத்துல காட்ட ‘அவர்’ங்ற பொது விகுதி (ஆண்பால், பெண்பால் இருவருக்கும் பொது) இருக்கு. இதுக்கு மேல என்ன எதிர்பார்க்கறீங்க?

(கலாசார, காரசார காரணத்தக் காட்றவங்க திரும்பிப் பாக்காம ஓடிடுங்க.)

Advertisements
%d bloggers like this: