jump to navigation

குழப்பமோ குழப்பம் Thursday November 13, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

வலைப்பதிய ஆரம்பித்ததிலிருந்து ஒரு குழப்பம். எது சொந்த விஷயம் எது பொது விஷயம் என்பது பற்றித்தான். நான் நேற்று ‘பின் தூங்கி (மிகப்)பின் எழுந்தேன்’ அதனால் முக்கியமான மீட்டிங்குக்குப் போகாமல் வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்பதை இங்கு புலம்ப வேண்டுமா அல்லது டைரியில் எழுத வேண்டுமா (அப்படி ஒன்றும் எழுதுவதில்லை என்பது வேறு விஷயம்) என்ற குழப்பம். சொந்த அனுபவத்தைக் கொஞ்சம் சுவராசியமாக எழுதினால் அதில் சுய தம்பட்ட வாடை அடிக்காது என்பதற்கு கண்ணன் அவர்களின் ‘வைகைக் கரை காற்றே’ தொடர் சாட்சி. அந்த அளவுக்கு எழுதும் திறமை இன்னும் வரவில்லை என்பதால் எங்கே எல்லைக் கோட்டைத் தாண்டிவிடுவேனோ என்ற சுய உணர்வு (self consiousness) இருந்து கொண்டே இருக்கிறது.

நிறைய எழுத வேண்டும் குறிப்பாக கல்லூரி நாடகளின் பயண அனுபவங்களை எழுத வேண்டும் என்ற நினைக்கிறேன், ஆனால் இந்த ‘நான்’ வராமல் (அல்லது குறைந்த அளவில் வரும்படி) எப்படி எழுதுவது என்ற குழப்பம். யாருமே எப்போதும் பொதுவான சமாச்சாரங்களைப்பற்றியே எழுதிக் கொண்டிருக்க முடியாது என்பதும் தெரியும், ஆனால் முன்பு சொன்னது போல அந்த எல்லைக் கோட்டின் வரையறை சரியாகத் தெரியாததால் இந்த தடுமாற்றம். போகப்போகச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். முதலில் எதாவது எழுதி அதை சுய விமர்சனம் செய்துபார்த்து மனதுக்குச் சரி என்று பட்டால் தொடர்வதாக உத்தேசம்.

என்ன குழம்பிவிட்டீர்களா? 🙂

Advertisements
%d bloggers like this: