jump to navigation

ஞாபகக் குறிப்பும் புவியியலும் Wednesday November 12, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

அமெரிக்கா வந்த ஆறுமாத காலத்துக்குள் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் கிட்டத்தட்டத் தெரிந்துவிட்டது. இந்தியாவின் அத்தனை மாநிலங்களையும் சொல் என்றால் எனக்குச் சொல்லத் தெரியாது. வரைபடத்தை மனதில் கொண்டுவந்து தட்டுத்தடுமாறி சொன்னாலும் முழுமையாகச் சொல்லுமளவுக்குத் தெரியாது. ஏன் இந்த வித்தியாசம்? புவியியல் பாடத்தைச் சரியாகப் படிக்காததாலா? இருக்க முடியாதே, அமெரிக்க அரசியல் வரைபடத்தை பள்ளியில் பார்த்ததே இல்லையே. பிறகெப்படி?

எல்லாம் இரண்டெழுத்து மாயம். ஆம், அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் ஒரு தனித்த குறியீட்டுப் பெயர் உண்டு, அது இரண்டு எழுத்துகளை மட்டுமே கொண்டிருக்கும், இதை வைத்து எந்த மாநிலம் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். உதாரணமாக ‘MO’ என்றால் அது ‘Missouri’ மாநிலத்தைக் குறிக்கும். முகவரிகள் எழுதும்போது இந்தச் குறியீட்டையே உபயோகிக்குமாறு அஞ்சல் துறை பரிந்துரைக்கிறது. கட்டமிடப்பட்ட பல விண்ணப்ப படிவங்களில் மாநிலத்தை எழுத இரண்டு கட்டமே ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்குப் பழகியபின் மக்களுக்கு எப்படி மறக்கும்? முக்கியமான காரணம் இது ஒரு ஞாபகக் குறிப்பு (mnemonics) என்பதே.

இதுமாதிரி இந்தியாவில் கொண்டுவந்தால் என்ன? கொண்டாவது வருவதாவது, அது ஏற்கனவே இருக்கிறது, ஆனால் வழக்கம் போல ஒரு மூலையில். இதை அதிகமாக உபயோகிப்பது வாகனங்களைப் பதிவு செய்யும் போக்குவரத்துத் துறை(RTO என்றால் தெரியுமல்லவா?).

எனக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு, தேசிய உரிமம் (National Permit) பெற்ற லாரிகளைக் கண்டால் முதலில் பார்ப்பது அதன் பதிவெண்ணைத்தான். எந்த மாநிலத்திலிருந்து வருகிறது அல்லது பதியப்பட்டது என்று தெரிந்துவிடும். தமிழகத்தில் ஓடும் (பதியப்பட்ட) வாகனங்களின் பதிவெண்களை கவனித்திருக்கிறீர்களா? TN என்று ஆரம்பிக்கும். இந்த குறியீட்டை ஏன் பரவலாக உபயோகிக்கக் கூடாது? அஞ்சல் துறையும் அரசாங்கமும்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பல லாரிகளின் பதிவெண்களைப் பார்த்ததிலிருந்து இந்தப் பட்டியல்.

TN – Tamilnadu, PY – Pondicherry, KA – Karnataka, KL – Kerala, AP – Andhra Pradesh, MH – Maharashtra, GA – Goa, MP – Madhya Pradesh, GJ – Gujarat, RJ – Rajasthan, HR – Haryana, CH – Chandigarh, DL – Delhi, UP – Utter Pradesh, PB – Punjab, OR – Orissa, WB – West Bengal, HP – Himachal Pradesh, JK – Jammu & Kashmir

Advertisements
%d bloggers like this: