jump to navigation

விளையாட்டாக ஒரு பாடம் Thursday October 30, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

தினமும் கடந்து செல்லும் பல கடைகளில் ஒரு கடை, வித்தியாசமான வாசகங்கள் பொறித்த டீ-ஷர்ட் விற்கும் கடை. கண்ணில் பட்டதில் நினைவிருக்கும் சில வாக்கியங்கள்

I can please only one person a day. Today is not your turn; tomorrow doesn’t look good either.

I don’t have an attitude problem; you have a perception problem.

Growing old is inevitable; growing up is optional.

எல்லாமே படித்ததும் சிரிப்பூட்டினாலும், கடைசி வாக்கியத்தின் நிதர்சனம் யோசிக்க வைத்துவிட்டது. என்னதான் படித்திருந்தாலும், உயரிய பதவியில் இருந்தாலும், சிலர் பண்பில்லாமல் நடந்து கொள்வதை, முக்கியமாக இணையத்தில், முகம் தெரியாது என்பதை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டு கண்டதையும் பேசும் (எழுதும்) பலர்தான் கண்முன் வருகிறார்கள்.

‘யாகாவாராயினும் நாவும் விரல்களும் காக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’

என்று புதுக் குறள் தான் சொல்ல வேண்டும்.

குறிப்பு: இந்த குறள் ‘ஈரடி வெண்பா இலக்கணத்தில் அமையவில்லையே’ என்று யோசிப்பவர்களுக்கு: இலக்கணம் மீறிய புதுக்கவிதை மாதிரி இது இலக்கணம் மீறிய புதுவெண்பா 🙂

Advertisements
%d bloggers like this: