jump to navigation

துணுக்குகள் Wednesday October 22, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

எகிப்து நாடு என்றாலே பிரமிட் ஞாபகம்தான் வரும். சிலருக்கு கூடவே மம்மிகள் எனப்படும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுகாமல் இருக்கும் சடலங்களும் ஞாபகம் வரும்.  இந்த பாதுகாக்கும் ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறார்கள் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள். இதை எப்படி நம்புவது? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நாம் உயிரோடு இருக்க வேண்டுமோ? 🙂

ஓபரா (Opera) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாங்க மேடை மேல அடித்தொண்டையிலேர்ந்து மூச்சு நிக்கிற வரைக்கும் பாடுவாங்களே அந்த இசை நாடகம்தான். நானும் கேள்விப்பட்டதோட சரி. தியேட்டரில் போய் பார்க்கும் தைரியம் இன்னும் வரவில்லை. வசனம் ஆங்கிலத்தில் இருந்தாலும் பாடல்கள் லத்தீன் மொழியில்தான் பெரும்பாலும் இருக்கும். சரி இதப்பத்தி இப்போ எதுக்கு பேசணும்? நல்ல கேள்வி.

சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை‘ நாட்டிய நாடகத்தைப் பார்த்தேன். அதுவும் இந்த ஓபரா வகையைச் சேர்ந்தது என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். கூடுதலாக இதையும் தெரிந்து கொண்டேன். ஓபராவில் (எனக்குத் தெரிந்து) இரண்டு வகை இருக்கிறது.

1. opera comique

2. grand opera

முதல் வகையில் வசனங்களும் இடையே பாட்டுக்களும் நடனங்களும் இருக்கும். இரண்டாவது வகையில் வசனத்துக்குத் தடா. ‘காயாத கானகத்தே….’ என்று அந்தக் கால தமிழ் சினிமா மாதிரி எல்லாமே பாட்டு மயம்தான். மேலும் முதல் வகை நாடகம் நகைச்சுவையாகவோ சோகமாகவோ முடியலாம், ஆனால் இரண்டாவது வகை சோகமே உருவானது (நடுவில் விவேக் மாதிரி யாராவது வருவார்களா?).

Advertisements
%d bloggers like this: