jump to navigation

கல்யாணம் Sunday October 19, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

“நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?” – பீச்சில் வாக்கிங் போகும்போது எதிரே வந்த இருவர் பேசிக்கொண்டு போனது திடீரென்று ஞாபகம் வந்தது.

அவருக்கென்ன கவலையோ? என்ன நடந்ததோ யாருக்குத்தெரியும்?

நாளைக்கு நடக்கபோவது தொ஢ந்துவிட்டால், அதற்கு நம்மை தயார்ப் படுத்திக்கொண்டுவிடுவோம். அப்புறம் வாழ்க்கையில் சுவராஸ்யமே இருக்காது. இப்படியாக தற்காலிக தத்துவ மேதையாக மாறிக்கொண்டே சோஃபாவில் சாய்ந்தேன். டீவி ஓடிக்கொண்டிருந்தது. “இந்திய ‘தொல்லை’க்காட்சிகளில் முதன் முறையாக” வரிசையில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது.

நாயகனும் நாயகியும் நியுசிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள். பாவம் இந்த தயாரிப்பாளர்கள். இவர்கள் தலையில் மிளகாய் அரைத்து வெளி நாடு சுற்றிப்பார்த்து விடுகிறார்கள் இந்த “கலைஞர்கள்.”

பார்வை மட்டும் டீவி மேல் இருந்தலும், எண்ணம் எல்லாம் “நாளைக்கு என்ன நடக்கும்” பற்றித்தான்.

இதோ இப்போது நான் இருக்கும் இந்த வீட்டில் இன்னும் நூறுஇரு நூறு ஆண்டுகள் கழித்து யார் இருப்பார்கள்? இந்த இடம் குடியிருக்க தகுந்த இடமாக இருக்குமா?

“இது லிங்கம் கக்கும் சாமி கோயில் இருந்த இடம், அத இடிச்சிட்டு சர்ச் கட்டிட்டாங்க; மறுபடியும் லிங்க கக்கும் சாமி கோயில் கட்டுவோம்!” என்று சண்டை போட்டுக்கொள்வார்களா? இப்படியாக பல கேள்விகள் எழுந்தன.

நாளைய நடப்பை பற்றி தொ஢ந்தவர்கள் யாரேனும் உண்மையிலேயே இருக்கிறார்களா?

ஜோசியக்காரன்? – “தஞ்சாவூர் பொ஢ய கோயில் மூலையில் கிடந்த கூழாங்கல்லை ஒரு காக்கா நந்தி முன்னாடி கொண்டுவந்து போட்டது நாட்டுக்கு நல்லதில்லை, ஆட்சி கவிழும் அபச குனம் இது.” என்று அபத்தமாகத்தான் சொல்லமுடியும் அவனால்.

வாஜ்பாய் பாத்ரூமில் சோப்பு வழுக்கி விழுந்தால்கூட “வழுக்கினார் வாஜ்பாய் – தஞ்சாவூர் காக்கா சம்பவம் எதிரொலி; நிலைக்குமா வாஜ்பாய் அரசு?” என்று தலைப்புச் செய்தி வரும். திருவாளர் ஜோசியக்காரர் மவுசு கூடிவிடும்; மஞ்சள் பத்தி஡஢கை முதல் மசாலா டீவி வரை ஒரே பரபரப்பாய் இருக்கும்.

டூயட் பாடி முடித்த ஜோடி காலேஜ் பென்ச்சில், ஒருத்தரை ஒருத்தர் முழிங்கிவிடும் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தனிமையை பாவம் ஏன் கெடுப்பானேன் என்று டீவியை ஆஃப் செய்துவிட்டு அப்படியே கண்ணயர்ந்து போனேன்.

உள் மனதில் எதையாவது நினைத்துகொண்டிருந்தால் அது சம்பந்தமாக ஏதாவது கனவு வரும் என்று படித்ததாக ஞாபகம். இந்த “நாளைய” சமாச்சாரம் கனவிலும் என்னை விட்டு வைக்கவில்லை.

ஏதோ வெளி நாடு போல் தெரிகிறது. பளபளப்பான சாலைகளில் கார்கள் வழுக்கி ஓடிக்கொண்டிருந்தன. எதிலும் ஒரு ஒழுங்கு தெரிந்தது. பராக்கு பார்த்துக்கொண்டே சாலையோர நடை பாதையில் நடக்கிறேன். முன்னால் ஒரு பஸ் ஸ்டாப் மாதிரி தெரிந்தது; வந்து நின்ற பஸ், அட! நம்ம மா நகர பேரூந்து! சிங்காரச் சென்னையில் தான் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை கனவிலும் கூட நம்ப முடியவில்லை!

மக்கள் முண்டியடிக்காமல் வரிசையாக ஏறி இறங்குகிறார்கள். யாரும் சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை; எல்லோரும் பாஸ் வைத்திருக்கிறார்கள். ஃபுட் போர்டுக்கு வேலையே இல்லை;எல்லாரும் ஏறியவுடன் டிரைவர் கதவை மூடிவிடுகிறார். காலேஜ் பசங்களை நினைத்து பா஢தாபப்படாமல் இருக்க முடியவில்லை

சென்னையில் இருக்கிறேன் என்று தெரிந்தாகிவிட்டது, அதனால் ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது. தலையை சொறிந்து கொண்டே மெலே நடந்தேன், சிக்னல் ஒன்று வந்தது. நான் சிக்னலை அடையவும் பச்சை விளக்கு எரியவும் சரியாக இருந்தது. எல்லா வாகனங்களும் அதிகம் புகை விடாமல் நகர்ந்தன. ஏதோ பொறி தட்டியது. ஆங்… ஹாரன் சத்தம்! பச்சை சிக்னல் விழுந்தவுடன் எங்கே முன்னாடி இருப்பவர்கள் தூங்கி விட்டார்களோ என்று பின்னாடி இருப்பவர்கள் அடிக்கும் ஹாரன் சத்தம் மிஸ்ஸிங்!

குப்பை இல்லாத வீதிகள், குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருக்கும் குப்பைகள், கடை பரப்பபடாத நடை பாதைகள் என்று பல அதிசயங்களை பார்த்துக்கொண்டு ரொம்பதூரம் நடந்துவிட்டேன்; ஒரே களைப்பாக இருந்தது. ஓட்டல் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தேன். சரவணபவன் புதுப்பொலிவுடன் நின்றது. பரவாயில்லை, அண்ணாச்சி ஓட்டல் காலம் கடந்து நிற்கிறது என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்து உட்கார்ந்து வெயிட்டரை கூப்பிட சுற்றும் முற்றும் பார்த்தேன், ஒருவரும் கண்ணில் படவில்லை.

பக்கத்து டேபிளில் இருந்தவர் டேபிளுக்கு அடியிலிருந்து ஒரு ட்ராயர் மாதிரி ஒன்றை இழுத்து ஏதோ கோலம் போட போவதுபோல் விரலால் அங்குமிங்கும் தொட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நானும் ட்ராயரை இழுத்தேன். அட, டச் ஸ்க்ரீன்! முதலில் கிரெடிட் கார்டை தேய்க்கவும் என்றது. சரிதான் ரொம்ப விவரமாக இருக்கிறார்கள் என்று நினைத்து ஒரு பிளேட் இட்லி, ஒரு காஃபி ஆர்டர் பண்ணினேன்.இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்றது.

இட்லியை விழுங்கிக்கொண்டே சுற்றி நோட்டம் விட்டேன். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருப்பதாகப் பட்டது. இருக்காதா பின்னே.

பக்கத்து டேபிளில் இரண்டு பேர் சாப்பிட்டு முடித்து விட்டு பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் முகம் மட்டும் கொஞ்சம் வாட்டமாக இருந்தது.

அவர்கள் பேசியது தெளிவாக கேட்டது.

“எல்லா வேலையும்தான் கான்ராக்டர்கள் கிட்டே விட்டாச்சே, இன்னும் ஏம்ப்பா கவலைப்படுற?”

“என்னதான் இருந்தாலும் ஒரு வித டென்ஷன் இருக்கத்தானே செய்யுது, ரவி? மீனா எனக்கு ஒரே பொண்ணு; அவ கல்யாணம் நல்லபடியா முடியனும்”

“கவலைய விடு கிருஷ்ணா, எல்லாம் நல்ல படியா நடக்கும். மப்பிள்ளை பையன் என்ன பண்றான்னு சொன்ன? ரெண்டு வருஷமா தேடிக்கண்டு பிடிச்ச மாப்பிள்ளை” – என்று லேசாக சி஡஢த்துக்கொண்டே கேட்டார்.

“உனக்கு எப்போதும் ஒரே விளையாட்டுதான். நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது அவ்வளவு சுலபமில்லை. உனக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி பேச மாட்ட.” மேலும் அவரே பேசினார்.

“எல்லாம் ஒத்து வரணும் இல்லையா? அவசரப்பட்டு ஜாதி விட்டு ஜாதி பண்ணக்கூடாது பாரு.”

சே! என்ன கனவு இது என்று விழித்துக்கொண்டேன். ஒரே இருட்டாக இருந்தது.

Advertisements
%d bloggers like this: