jump to navigation

விண்வெளி ஆராய்ச்சி Friday October 17, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

பூமி உருண்டை வடிவமுடையது, சூரியனை மையமாக வைத்து பூமி உட்பட பல கோள்கள் சுற்றி வருகின்றன என்று அண்டவெளியைப் பற்றிய பல கண்டுபிடிப்புகள். அள்ள அள்ள குறையாத அமுத சுரபி மாதிரி அண்ட வெளியின் அதிசயங்கள் தினம் தினம் தெரிய வருகிறது.

என்னதான் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தாலும், விண்வெளியில் மனிதனே சென்று பார்த்து அனுபவிக்கும் தகவலுக்கீடாகாது. இந்த விண்வெளி ஆராய்ச்சியில் கோலாச்சும் இரு நாடுகள் ரஷ்யா மற்றும் அமெரிக்கா. போன நூற்றாண்டில் தொடங்கிய, யார் முதலில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்புகிறார்கள் என்ற போட்டியில் முன்னாள் சோவியத் குடியரசு வெற்றி பெற்றது. தோல்வியில் துவண்டு விழுபவர்கள் அல்லர் அமெரிக்கர்கள். முதன் முதலில் சந்திரனில் மனிதனை இறக்கி சரித்திரம் படைத்தனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் கோலோய்ச்சிக் கொண்டிருக்கும் நாடுகள் இவை இரண்டும். இந்த வாரம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்த சீனா இந்தக் குழுவில் புத்தம் புதிய உறுப்பினர். இந்த வெற்றியில் ரஷ்யாவின் உதவி குறிப்பிடத்தக்கது என்றாலும், சீனர்களின் அயராத உழைப்பால் விளைந்தது. சீனாவை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அமெரிக்காவுக்கு இது ஒரு புதிய தலைவலி. சீனாவுக்கோ உலக வல்லரசாக, அமெரிக்காவுக்கு போட்டியாக வருவதில் முதல் படி.

இந்தியாவும் இந்தத் துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. செயற்கைக் கோள் ஏவுவதில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நாடு அநேகமாக இந்தியாவாகத்தான் இருக்கும். மோசமான வானிலையிலும் ரிசோர்ஸ் சாட் -1 எனப்படும் செயற்கை கோளை ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவியிருக்கிறது இந்தியா. இந்த வெற்றிக்குப் பின்னால் பல வலிகள் நிறைந்த தோல்விகள் இருக்கின்றன. இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் “அக்னிச் சிறகுகள்” (ஆங்கிலத்தில் Wings of fire) புத்தகத்தில் காணலாம். (ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!)



சோவியத் குடியரசுக்கும், அமெரிக்காவுக்கும் நடந்த விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியின் பிண்ணனியில் எடுக்கப்பட்ட October Sky படம் கிடைத்தால் பாருங்கள். அற்புதமான படம்.

Advertisements
%d bloggers like this: