jump to navigation

ஒரே படைப்பு பல இடங்களில் Sunday October 12, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

கணினியில் தமிழ் கோலாச்சிக் கொண்டிருக்கிறது. இதில் மடலாடற் குழுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அகத்தியர், தமிழ் உலகம், ராயர் காப்பி கிளப், மரத்தடி, சந்த வசந்தம், உயிரெழுத்து என்று ஏகப்பட்ட குழுக்கள். சந்தோஷம் தான். ஆனால் எல்லா குழுக்களும் தனித்தன்மையுடன் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறி.

படைப்பாளிகள் சிலர் தங்கள் படைப்புகளை (முக்கியமாக கவிதைகள்) ஒரே சொடுக்கில், தான் உறுப்பினராக இருக்கும் எல்லா குழுக்களுக்கும் அனுப்பி விடுகிறார்கள். பரவலான வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் என்று நினைக்கிறேன்.

எல்லா குழுக்களும் யாகூவின் இலவச சேவையையே பயன்படுத்துகின்றன; இவர்கள் தரும் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இடத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு படைப்பை பல குழுக்களில் இட்டு, அதனை விமர்சித்து, பாராட்டி, சில சமயங்களில் விவாதிக்கும் மடல்கள் கணிசமான இடத்தைப் பிடிக்கின்றன. இலவச சேவை என்பதால் யாகூ எல்லா மடல்களினடியில் தங்கள் விளம்பர வாசகங்களையும் கண்க்கில் கொள்ள வேண்டும்.

எல்லா படைப்பாளர்களுக்கும், தங்கள் படைப்பு மற்றவர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது என்று நினைக்கும் போது உற்சாகம் வருவது இயல்பே. சரி, இதற்கு மாற்று வழி என்ன?

ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு தனித்தன்மையைக் கொள்ள வேண்டும். படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை தக்க குழுவுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். எல்லா குழுக்களும் மடல்களைப் பொதுவில் தான் வைத்திருக்கின்றன, தேவைப் படுவோர் நேரிடையாக குழுவில் சென்று படிக்கலாம்.

சரி, டயல்-அப் இணைய இணைப்புள்ளவர்கள் என்ன செய்வார்கள்? யோசிக்க வேண்டிய விஷயம். இவர்களுக்கு ஒரே வழி எல்லா குழுமத்திலும் இணைந்து எல்லா மடல்களைப் பெறுவதுதான். சிலர் இப்போதே அப்படிச் செய்தால், ஒரே படைப்பை பல குழுக்கள் வழியாக பெறுவதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உங்கள் கருத்து என்ன?

Advertisements
%d bloggers like this: