jump to navigation

இவர் யார்? Monday October 6, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

மின் மடல்களில் கையெழுத்திட்ட பிறகு ஏதாவது “தத்துவ” வரிகள் சேர்க்கும் பழக்கமுண்டா உங்களுக்கு? (தனிப்புலம்பல் முகவரி இதுல சேத்தி கெடையாது, சொல்லிப் புட்டேன்)

என் நண்பன் ஒருவனுக்கு இந்தப் பழக்கம் உண்டு. தேஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி ஒரே தத்துவத்தை வைத்துக்கொள்ளாமல் வாரத்துக்கொரு முறையோ மாதத்திற்கொரு முறையோ மாற்றும் நல்ல பழக்கமும் அவனிடம் உண்டு.

சமீபத்தில் Spelling என்ற தலைப்பில், வார்த்தையின் முதலெழுத்தையும் கடைசியெழுத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு நடுவிலுள்ள எழுத்துக்களை (குறிப்பாக உயிரெழுத்துக்களை) தாறுமாறாக மாற்றினாலும் அந்த வார்த்தையைப் படித்து புரிந்து கொள்ள முடியும் என்பதை அறிந்திருப்பீர்கள்.

நண்பனுக்கு தத்துவத்தை அடிக்கடி மாற்றும் பழக்கமிருக்கிறதே தவிர, அடிக்கடி எங்கள் குழுவுக்கு மடலெழுதும் பழக்கம் சுத்தமாக கிடையாது. அத்தி பூத்தாற் போல அவன் சமீபத்தில் எழுதிய மடலினடியில் கண்ட தத்துவம் இது, “Time wounds all heels”.

இந்த வேகப்படிப்பும் (speed reading), கூடப்பிறந்த மேதாவித்தனமும் சேர்ந்து, மூளையின் குற்றம் கண்டுபிடிக்கும் மூலையை பிறாண்டி, “தப்பு தப்பா சொல்றான் பார்” என்றது.

தப்பு பண்றவங்கள திருத்தறதுதான் என் தலையாய கடமையாச்சே, அதுவும் நெருங்கிய நண்பன் வேறையாச்சா, சூட்டோ டு சூடா ஒரு பதில்; என்னடா “Time heels all wounds”-னு சொல்ல வந்து சொதப்பிட்டியான்னு கேட்டேன்.

அப்பாடா ஒரு தப்ப திருத்தியாச்சுன்னு திருப்தியோட தூங்கிட்டேன். மறுநாள் கண்ல பட்ட வாசகத்துல எல்லாம் எதாவது தப்பு இருக்கான்னு கண்ண இடுக்கிக் கிட்டு பார்த்தேன்; எல்லாம் முந்தின நாள் மெதப்பு வேற ஒண்ணுமில்ல.

ராத்திரி வந்து பாத்தா பீட்டரு உடுற நண்பன் ஒருத்தன் பதில் போட்டிருந்தான். இவன் என்னடா சொல்லிருக்கான்னு தொறந்து படிச்சா…. Did you mean “Time HEALS all wounds”? அப்டீன்னு கேட்டிருந்தான். அதோட நிக்காம “அவன் சொன்னது சரிதாண்டா”-ன்னு சொல்லிருந்தான். டமால்! மெதந்துகிட்டு இருந்த நான் தொப்புன்னு கீழ வுழுந்த சத்தம்தான் அது.

அப்புறம் என்ன ஹி…ஹி… ஒரே பம்மல்தான் போங்க.

சரி இதைச் சொன்னது யார்? ஒன்லைனருக்கு பேர் போன அமெரிக்கர்.

யாரோ எதோ சொல்றாங்களே? என்னது? பாப் ஹோப் (Bob Hope)-ஆ? இல்லீங்க.

இவர் இன்னொருத்தர். காமெடியா தத்துவமும் சொல்லிருக்கார். மேலே சொன்னமாதிரி வித்தியாசமா சொல்றதுதான் இவர் பாணி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர். நாடகம், படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisements
%d bloggers like this: