jump to navigation

தமிழக பொறியியல் கல்லூரிகள் Wednesday September 10, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

“நூறு மாணவர்கள் கூட சேராத 51 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்” – இன்றைய தினமணி செய்தி.

ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு மிகவும் மதிக்கப்பட்டது, அது ஒரு கௌரவம் என்று கூட சிலரால் நினைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சுற்றளவுக்கு ஒரு பொறியியல் கல்லூரி என்ற கணக்கு வைத்து கல்லூரிகள் நடத்தப்பட்டன. நுழைவுத்தேர்வு எழுதி ஒரு நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

பெரும்பாலான தகுதியுடைய மாணவர்களுக்கு பொறியியல் கல்வி சென்றடைவதில்லை என்ற வாதம் பிறந்தது, விளைவு AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் மேலும் பல பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி வழ்ங்கியது. இங்குதான் பிரச்சினையே ஆரம்பம். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க இன்னன்ன வசதிகள் இருக்க வேண்டும், அப்போதுதான் அங்கீகாரம் என்று அறிவிப்போடு மட்டும் நிறுத்திவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமல் மானாவாரியாக அனுமதி வழங்கப்பட்டது.

திருவிழாவில் போடப்படும் தற்காலிக டென்ட் ரேஞ்சுக்கு இருக்கும் கட்டிடங்களை வைத்துக்கொண்டு கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தடுக்கி விழுந்தால் ஒரு பொறியியல் கல்லூரி வாசலில்தான் விழும் நிலமை இப்போது.

இந்த தனியார் கல்லூரிகளில் பயில கட்டணம் சாதாரண மக்களால் கொடுத்து மாளாது. கல்வி என்ற பெயரில் இங்கு ஒரு திட்டமிட்ட வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு விடிவு காலம் எப்போதோ?

குறிப்பு: இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 250 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

Advertisements
%d bloggers like this: