jump to navigation

தமிழில் எழுதுவது சுகம்! Tuesday September 9, 2003

Posted by Pari(பரி) in பொது.
trackback

தமிழில் கடைசியாக நிறைய எப்போது எழுதினேன்? 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்று நினைவு. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீட்டுக்கு எழுதிய கடிதங்கள் தவிர தமிழில் எழுத வாய்ப்பு மிகக்குறைவு (பொதுவாக எழுதுவதே குறைந்துவிட்டது). மின்னஞ்சல், இணையம் என்று எல்லாமே ஆங்கில மயமாய் இருந்ததில் தமிழில் எழுதுவதே கிட்டத்தட்ட மறந்த நிலையில் இந்த வலைப்பதிவு (வலைப்பூ என்று சிலர் சொல்கிறார்கள்) பற்றி அதிகம் படிக்க நேர்ந்தது. என்னதான் ரோமனைஸ்டு தமிழில் எழுதினாலும், தமிழ் எழுத்துக்களை திரையில் பார்க்கும் சுகமே தனி!

பல ஆண்டுகளாக பல வடிவங்கள், குறியீடுகள் தாண்டி இன்று சற்றே நிலையான யூனிகோட் குறியீட்டில் தமிழை எழுத முடிகிறது. இதன் பலமே தேடல் இயந்திரங்கள் கொண்டு தேட முடியும் என்பதுதான். நூற்றுக்கணக்கான தமிழ் இணைய தளங்கள் பல தகவல்களை சுமந்துகொண்டிருந்தாலும், தேவையான தகவலை தேடமுடியாமல் இருப்பது துரதிஷ்டவசமான ஒன்று. யூனிகோட் அந்த குறையை போக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கே எனது எண்ணங்களை பதியலாம் என்றிருக்கிறேன். இவை மனதை பாதித்த சம்பவங்களாகவோ, உபயோகமுள்ள தவல்களாகவோ, நாட்டு, உலக நடப்புகளாகவோ இருக்கலாம்.

இந்த பக்கத்தை வடிவமைக்க நான் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது பத்ரியின் வலைப்பதிவு. பல நல்ல விஷயங்களை எழுதுகிறார். நன்றி பத்ரி.

Advertisements
%d bloggers like this: