jump to navigation

அஞ்சலி – ‘தேனீ’ உமர் Thursday July 13, 2006

Posted by Pari(பரி) in பொது.
comments closed

கணினியில் தமிழில் எழுதிய நாளில் அடைந்த பரவசம் இன்னும் நினைவில் இருக்கிறது. அதற்கு எத்தனை பேர் உழைத்திருக்க வேண்டும் என்று அன்று நினைக்கவில்லை; நினைக்கத் தோன்றவில்லை.

தமிழ் வலைப்பதிவு குழந்தையாக இருந்த காலத்தில்(2003) விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்கள் பரஸ்பரம் உதவிக்கொண்டோம். அப்போது இருந்த முக்கியப் பிரச்சினை எழுத்துரு(font). இணைய மையங்கள மற்றும், அலுவலகங்களில் தமிழ் எழுத்துரு இல்லாத நிலையில் வலைப்பதிவுகளை வாசிக்க முடியாமல் இருந்தது. இயங்கு எழுத்துருவை(dynamic font) உருவாக்கி இதைத் தீர்த்துவைத்தார் உமர்.

புதியவர்களுக்குப் புரியும் வகையில் நுட்பக்(technology)கட்டுரைகள் எழுதுவது மிகச் சிலரே. அதையும் சிறப்பாகச் செய்தவர்களில் உமர் ஒருவர்.

சத்தமில்லாமல் பிறருக்குப் பயன்தரும் செயல்களைச் செய்தவர் மறைந்தது ஒரு பெரிய இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.

Advertisements

திண்ணை விமோசனம் பெற்றது! Monday April 17, 2006

Posted by Pari(பரி) in பொது.
comments closed

ஒரு வழியாக திண்ணை யுனிகோடுக்கு மாறியிருக்கிறது!
வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இடப்பக்கம் இருக்கும் இணைப்புகள்(links) மங்கலாகத் தெரிகின்றன.

திண்ணை யுனிகோடால் ஆய பயனென்கொல்
திண்ணமாய்த் தேடிச்சண்டை யிட 🙂

ஓட்டுப் போடுங்க Friday April 14, 2006

Posted by Pari(பரி) in பொது.
comments closed

மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்து http://www.indibloggies.org/ இந்திய வலைப்பதிவர்களுக்கான போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறது. இது இந்தியர்கள்(உலகலாவிய)ஆங்கிலத்தில் பதியும் பதிவுகளுக்கு முக்கியத்துவம் தந்தது. இந்திய மொழிகளில் உள்ள வலைப்பதிவுகளுக்குத் தனி அங்கம் இருந்தாலும் அவ்வளவு முக்கியத்துவிம் தரப்படவில்லை. ஒரு தன்னார்வலத் தனிக்குழுவால் வடிவாக்கப்பட்டதால் இருக்கலாம். இருந்தும் சென்ற முறை தமிழ்ப் பதிவர்கள் கணிசமான அளவில் கலந்துகொண்டது ஒரு முன்னேற்றம்.
(more…)

விண்டோஸ் லைவ்(Windows Live) Wednesday March 8, 2006

Posted by Pari(பரி) in பொது.
comments closed

கூகுள் இல்லாமல் இணைய வாழ்க்கை இல்லை என்று ஆகிவிட்டது. வால் ஸ்ட்ரீட்டின் செல்லப் பிள்ளையாக பணத்தில் மிதக்கிறது கூகுள. அந்தப் பணத்தை தானும் பங்கு போட வேண்டும் என்று யாஹூவும் மைக்ரோசாஃப்டும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி மைக்ரோசாஃப்ட் பிழிந்த ரசம்தான் விண்டோஸ் லைவ். Ajax என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு “படுத்தி”யிருக்கிறார்கள். தேடல் முடிவுகளிலிருந்து தேட இன்னொரு சேவை தேவைப்படுகிறது. 13” டிவி திரை மாதிரி குட்டித் திரையில் தேடல் முடிவுகளைக் காட்டுவது ‘அறிவுபூர்வமான’ வடிவமைப்பு. கழிவறைத் தாள் சுருளில் எழுதிப் படிப்பதுபோல் இருக்கிறது.
கொசுறு: கூகுளில் microsoft என்றும் msn search/live-ல் google என்றும் தேடி வலப்பக்கம் வரும் விளம்பரங்களை கவனிக்க.

விண்டோஸ் லைவ் நுட்பம் தமிழ்ப்பதிவுகள்

மெகா சீரியல்கள் Friday December 16, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

சென்ற மாதம் ஒரு மூன்று நாட்கள் “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” புகழ் சன் டிவியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
முன்பொரு காலத்தில்(’97) பெங்களூரில் ரிமோட் இல்லாத 14இன்ச் கருப்பு-வெள்ளை டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தோம். சாப்பிட்டு விட்டுத் தூங்குவதற்கு முன்னால் டிவி போட்டால் சக்தி என்ற மெகா சீரியல் ஓடிக் கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சுகமாக தூக்கம் வரும்; அவ்வளவு விறுவிறுப்பு. கதை என்று சொல்லப் போனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த கதை தான். வீட்டில் “குத்து விளக்கு” மாதிரி பொண்டாட்டி இருக்க, புருஷன் இன்னொருத்தியுடன் “தொடர்பு” வைத்திருப்பான், அதுவும் அவள் ஒரு நடிகை என்று நினைக்கிறேன். இது வீட்டில் எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் எதுவும் செய்ய முடியாது; பொண்டாட்டியும் மாமனாரும் மாறி மாறி கிளிசரின் போட்டுக் கொள்வது தவிர.

மீண்டும் இந்தக் காலத்துக்கு வருவோம். என்றும் மாறாத பசுமையான அதே கதைதான் கிட்டத்தட்ட எல்லா சீரியல்களிலும் இன்றும் வலம் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு வில்லன் ஆண் என்றால் குட்டித் திரைக்கு வில்லன்(வில்லி?) பெண். அது மாமியார் வடிவிலோ மருமகள் வடிவிலோ, ஏன் பெற்ற தாய் வடிவிலோ கூட இருக்கலாம்.

இந்த மாதிரி அக்மார்க் செயற்கைத்தனமான சீரியல்களைக் கண்டால் பற்றிக் கொண்டு வரும். வேறு வழியில்லாமல் குடும்பத்தாருடன் கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்த போது வாய் சும்மா இருக்காமல் எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தேன். யாரும் கண்டு கொள்வது மாதிரி தெரியவில்லை. சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். எல்லோரும் பயங்கர சீரியஸ் முகத்துடன் பார்ப்பது தெரிந்தது. இதற்கு மேல் வாயைத் திறந்தால் எதாவது ஏடாகூடமாகி விடுமோ என்று டிவிக்கு முதுகு காட்டிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.

குமுதமோ விகடனோ, அட்டையைக் கிழித்துவிட்டால் இரண்டும் ஒன்றுதான் என்று யாரோ சொன்னார்களாம். அது போல பேர் போடாமல் மெகா சீரியல்களை வரிசையாகக் காட்டினால் ஒன்றும் வித்தியாசம் தெரியாது போலிருக்கிறது. குமுதத்தில் அரசு பதில் சொல்கிறார், ஆனால் விகடனில் மதன் பதில் சொல்கிறார் என்று வித்தியாசப்படுத்திக் காட்டுவது போல மெகா சீரியல் ரசிகர்கள் வேண்டுமானால் வித்தியாசம் சொல்லக்கூடும் 🙂

கேள்வி: மெகா சீரியல் என்பதை வரையறுக்க
பதில்: அழுகையும் அழுகை சார்ந்த மனிதர்களும் வாழும் குண்டுசட்டி

தமிழ்ப்பதிவுகள | மெகா சீரியல் | டிவி

புதிய யுனிகோட் – தமிழக அரசு Friday October 14, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

இப்போது பரவலாக நாம் பயன்படுத்தும் யுனிகோட் குறியேற்ற முறையில் குறைபாடு இருக்கிறது என்று பலரும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். யுனிகோட் குறியீட்டு முறையை நிர்வகிக்கும் unicode consortiuam-ல் உறுப்பினராக இருக்கும் தமிழக அரசு இதைக் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இப்போது திடீரென்று “புதிய யுனிகோட்” முறையை அறிமுகப்படுத்தி அனைவரின் கருத்துகளையும் கேட்டுள்ளனர். முழு விவரமும் பார்க்க சுட்டுக: http://www.tunerfc.tn.gov.in/

குறியேற்ற முறைபற்றி எனக்கு ஆழமாகத் தெரியாததால் பெரிதாக் சொல்ல ஒன்றுமில்லை. தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை comments-tune (at) tamilvu.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். எனக்குத் தெரிந்ததை நானும் அனுப்பியிருக்கிறேன். அதில் முக்கியமாக நான் வலியுறுத்தியிருப்பது Transperency. பார்க்கலாம்.

பிற்சேர்க்கை:யுனிகோட் பற்றி சென்ற ஆண்டு தமிழ் உலகம் குழுவில் நடந்த விவாதத்தை இங்கே காணலாம் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/29133.(in TSCII)

பணம் பத்தும் செய்யும் Monday August 15, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

அதுக்கு மேலயும் செய்யும்.

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா பாருங்க பணம் இருந்தாத்தான் உலகத்துல ஆனந்தமா இருக்க முடியுமாம்; சமீபத்திய ஆராய்ச்சி ஒண்ணு சொல்லுது.

ரெண்டு வாரத்துக்கு முன்னால, வேலை இல்லாம சும்மா ஆஃபீஸ் போய் பொழுது போக்குற ஒருத்தன்(அவன் தப்பு இல்லீங்க) கல்லூரி வகுப்புக் குழுவுல Quality of Life அப்டீன்னு ஒரு தலைப்புல “பணம் இருந்தா சந்தோஷமா இருக்கலாமா?”-ன்னு ஒரு விவாதத்த ஆரம்பிச்சு வச்சான்(நாங்க அப்பப்போ இப்டி உலகை உய்விக்கும் தலைப்புகளப் பத்திக் காரசாரமா விவாதிப்போமாக்கும்).

வழக்கம்போல “பணமே” கட்சியும், “பணம் மட்டுமே இல்லை” கட்சியும் மாத்தி மாத்தி விவாதம் நடக்குறப்போ நடுவுல நான் பூந்து இப்டி சொன்னேன்

நாம எவ்ளோ வச்சிருக்கோம்கிறது எப்பவுமே முக்கியமாப் படாது. அடுத்தவன் எவ்ளோ வச்சிருக்கான், அவன எப்டித் தாண்டுறது(அடுத்தவ வூட்டுக்காரன் எவ்ளோ வச்சிருக்கான், நம்ம வூட்டுக்காரன் ஏன் வச்சில்ல)ங்றதுதான் *ரொம்ப முக்கியமா* படும் – Peer Pressure

மனுஷனுக்கு தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே போகும். அதாவது அதிகமாக்கிக்கிட்டே போவான். ஒரு பெரிய பட்டியல் இருக்கும் அதுல டிக் மார்க் போட்டுக்கிட்டே வருவான், மேலே போட போட கீழ அது வளர்ந்து கிட்டே இருக்கும். டிக் போட்டதையும் வச்சிக்கணும். புதுசா வ(ள)ர்றதையும் வச்சிக்கணும். எல்லாத்துக்கும் பணம் வேணும்.

நாஞ்சொன்னத அப்டியே இந்த ஆராய்ச்சி முடிவுல சொல்லிருக்காங்க.

நான் போய் அவங்க மேல வழக்குப் போட்டு பணம் பாக்கணும். வரட்டுங்களா?

சந்திரமுகி பின்னூட்டங்கள் Friday July 22, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

ஆர்வ மிகுதியால் சந்திரமுகி திரைப்படம் 100வது நாள் எட்டியதைக் கொண்டாட மாயவரத்தான் என்பவர் என்னுடைய வலைப்பதிவு உட்பட பலருடைய பதிவுகளின் பின்னூட்டங்களில் சம்பந்தமில்லாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பதிவில் இதுபற்றி ஒரு பதிவைப் போட்டுக் கொண்டாடாமல் சம்பந்தமில்லாமல் பலரின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதில் நேர விரயத்தைத் தவிர என்னத்தைச் சாதித்துவிடப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் இதுபோன்ற சம்பந்தமில்லாத பின்னூட்டத்தினால் பலருக்கும் எரிச்சல் வரும் என்பதைப் புரிந்து கொள்வது உத்தமம். தொழில்நுட்ப ரீதியாகச் சொல்வதானால், அவர் செய்வது எரிதம்(spam).

கொண்டாடுவதை தயவுசெய்து உங்கள் பதிவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒத்த கருத்துடையவர்கள்/சக ரசிகர்கள் அங்கு வந்து கலந்துகொள்வார்கள்.

மங்கலாய் மங்கலம் Wednesday July 6, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கிறுக்கல்கள்.காம் தளத்துக்குச் சொந்தக்காரனானவன், ‘தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றார்’ என்ற கூற்றுக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டான் என்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சிக் கொள்கிறோம்.

சில ‘கோயிஞ்சாமி’களுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை 🙂

கத பொஸ்தகம் படிக்குது புள்ள! Wednesday June 15, 2005

Posted by Pari(பரி) in பொது.
comments closed

‘இதெல்லாம் உருப்புடுமா? பாட பொஸ்தகம் படிக்காம கத பொஸ்தகம் படிக்குது புள்ள.’ இது தான் பெரும்பாலான கிராமங்களில் “இலக்கிய”த்திற்கு வரவேற்பு. இது போதாதா நான் பொஸ்தகம் வாசிச்ச் அழகச் சொல்ல? என்னையெல்லாம் எதுக்கு நவன் கூப்பிட்டார்ன்னு தெரியல 😦
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே(அதாங்க சின்ன வயசுல), வீட்டுப் பரண்மேல் தூங்கிக் கொண்டிருந்த புத்தகங்களைத் “திருடி” படித்தவை எல்லாம் இப்போது நினைவில் இல்லை.

பாரதி வாழ்க்கை பற்றிய புத்தகம்
சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு
அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு
இன்னும் என்னென்னவோ சில புத்தகங்கள்.(இதுக்கெல்லாம் வெவரம் கேட்டா தொலைச்சிப்புடுவேன்!)

“விவரம் தெரிஞ்ச”துக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சதுன்னு சொன்னா, “கையில எது கெடச்சாலும்.” ஒரு சோகமான விஷயம் என்னென்னா, மிக்ஸர் பொட்டலம் போட்ட தினத்தந்தி, வீட்டுக்கு சாமான் வாங்குறப்போ கெடைக்கிற பேப்பர், பஜ்ஜி சுத்தின பேப்பர் – இப்டித்தான் கைல கெடைக்கும்.

பக்கத்து ஊர்ல இருக்கற லைப்ரரிக்குப் போனா -தப்பித் தவறி- அது தெறந்திருந்தா, மூடுற வரைக்கும், இன்னதுன்னு இல்லாம் எதையாவது எடுத்துப் படிக்கிறது ஒரு சுகம்.

ஓசில படிக்க ஆரம்பிச்சி, எப்பவாவது காசு குடுத்து வாங்கின “பாக்கெட்” நாவல் எல்லாம் நாலஞ்சி இங்கிலீஷ் வார்த்தை/வாக்கியம்(தமிழ் வழி ஆங்கில ஆசான்!) தெரிஞ்சிக்கத்தான் பிரயோசனமாச்சு. இந்த பாக்கெட் நாவலெல்லாம் “குப்பை, குப்பையைத் தவிர வேறெதுவுமில்லை”-ன்னு ரொம்ப சீக்கிரமே புரிஞ்சிப் போச்சு. ஆனா பாருங்க அப்பவெல்லாம் இந்த புத்தங்கள்தான் கடை வாசல்ல தொங்கும்.

Lifco Dictionary படிச்சிருக்கீங்களா? அட, நெசமாத்தான் கேக்கறேன்! Words often misspelled, idioms and phrases, proverbs, abbreviations, inventions – இப்டி நல்ல விஷயங்கள், யாரும் சொல்லிக்குடுக்காத விஷயங்கள் இருக்கும். வார்த்தைக்கு அர்த்தம் பாக்க பொரட்டுனதவிட, இந்தப் பகுதிகளப் படிக்கிறதுக்குப் பொரட்டுனதுதான் அதிகமா இருக்கும்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் – புதுமைப்பித்தன் பதிப்பகம்
புதுமைப்பித்தன் பல்வேறு பெயர்களில் பல இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. புதுமைப்பித்தனால் எழுதப்பட்டது என்று “நம்பப்படும்” சில கதைகளும் அடக்கம். (அந்தக் காலத்திலும் “தேவா”க்கள் இருந்திருக்கிறார்கள் போல.)

ஜெயகந்தன் சிறுகதைகள்(2 தொகுதிகள்) – கவிதா பதிப்பகம்
ஒரு குளிர்காலத்தில் துணையாய் இருந்தவை

சில நேரங்களில் சில மனிதர்கள்
படித்து முடித்துவிட்டு, சில மாதங்கள் சென்று எதேச்சையாக படத்தையும் பார்த்த அனுபவம் வித்தியாசமானது.

அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம்
மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். அங்கங்கே இடைசெருகப்பட்டிருந்த கலாமின் ‘கவிதை’களைத் தாண்டிவிட்டேன். ஒரே மூச்சில் படித்து முடித்தது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

பொன்னியின் செல்வன்
நான் (பழைய) தஞ்சாவூர் மாவட்டக்காரன். இது போதாதா.

சிவகாமியின் சபதம்
மீண்டும் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.

தொல்காப்பியப்பூங்கா – மு. கருணாநிதி
மதுரைத் திட்டம் பற்றித் தெரியும் முன் வாங்கியது. அங்கங்கே இருக்கும் நகைச்சுவைக்காக, போனால் போகிறதென்று விட்டுவிடலாம்.

கிறுக்கல்கள் – ரா. பார்த்திபன்
புதுமை. வித்தியாசம். ஏகப்பட்ட உழைப்பு.

John Grisham – Legal Thriller expert
The Brethren
Street Lawyer
The Summons
A Painted House (Not a legal thriller.)
The Partner
Runaway Jury
(List may not be complete, as I don’t remember them all.)

Shall we tell the President? – Jeffrey Archer
–Just forget it. Not worth the time.

To Cut a long story short – Jeffrey Archer
–Collection of short stories. Some really short.

ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுத வேண்டும் என்று The Elements of Style வாங்கிப் படித்ததனால் தூண்டப்பட்டு வாங்கியது மொழி நடைக் கையேடு (நூல் அறிமுகம் 1, 2, 3)

Malgudi days
Short stories by RK Narayan. Could not go beyond 10 or so stories. Jut too plain.

9/11 Commission Report – The first chapter is a real life thriller.

மதுரைத் திட்டம் – கண்ணை மூடிக்கொண்டு சொடுக்கி எது கிடைக்கிறதோ அதைப் படிப்பது. கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், சித்தர் பாடல்கள், ஏரெழுபது, விவேக சிந்தாமணி, திருக்குற்றாலக் குறவஞ்சி, பாரதிதாசன் கவிதைகள், தேவைக்கேற்ப திவ்விய பிரபந்தம், தேவாரம், திருமந்திரம்….. இப்படியாகப் போகும். (OTL தமிழ் அகராதி உதவியுடன்.)

பாரதி, கைக்கு அடக்கமா சின்னதா பிளாஸ்டிக் உரையுடன்(ஆமா, இப்டித்தான் விளம்பரம் பண்ணுவாங்க) துணைக்கு இருக்கான்.

போங்கப்பா இந்த மாதிரி எழுத போரடிக்குது.